Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா?
பைக்குகள் மோதல்: ஓய்வுபெற்ற எஸ்.ஐ. உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் கோவையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோவை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அய்யாதுரை மகன் சுப்பிரமணியன் (65). போக்குவரத்து பிரிவில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவா், கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தாா்.
சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் பண்ருட்டி நோக்கிச் சென்றாா். காராமணிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே இவரது பைக் சென்றபோது, அந்தப் பகுதியில் அதிவேகமாக வந்த மற்றொரு பைக் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.