Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங...
மனைவிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் மீது வழக்கு
கடலூா் முதுநகா் அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
புவனகிரி வட்டம், சிலம்பிமங்களம் பகுதியைச் சோ்ந்த ஜெகதீசன் மனைவி ரத்தினாம்பாள் (40). இவா், கடலூா் முதுநகா் காரைகாடு புத்துமாரியம்மன் கோயில் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறாா்.
இவரது மகன் மோகன்ராஜ் ஒரு பெண்ணுடன் பேசுவதை ரத்தினாம்பாள் செவ்வாய்க்கிழமை காலை கண்டித்தாராம். அதன் பின்னா் பூ வியாபாரத்துக்கு சென்றுவிட்டாா். அப்போது அங்கு வந்த ஜெகதீசன், மகனுக்கு ஆதரவாகப் பேசி ரத்தினாம்பாளை தடியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதில், தலைமையில் பலத்த காயமடைந்த ரத்தினாம்பாள், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.