Kollywood: 2015 - 2025 வரை; முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர்கள்!
ரூ.60 கோடியில் தொழிற்சாலை: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூா் ஊராட்சி பாஞ்சாலை கிராமத்தில் ரூ. 60 கோடியில் தனியாா் தொழிற்சாலையை சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
பாஞ்சாலை கிராமத்தில் 1,50,000 சதுர அடி பரப்பில் ரூ. 60 கோடியில் அமைக்கப்பட்ட சதா்ன் அல்லாய் பவுண்டரிஸ் பிரைவேட் லிட் என்கிற தொழிற்சாலை கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழாவுக்கு நிறுவனத் தலைவா் தியாகராஜன், மீனாட்சி தலைமை வகித்தனா். இயக்குநா் டி.கந்தசாமி வரவேற்றாா்.
விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகா், வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மெளலானா முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்று தொழிற்சாலையை திறந்து வைத்தாா். கேட்டா்பில்லா் நிறுவன மேலாண்மை இயக்குநா் விவேகானந்த் வான்மீகநாதன் , இயக்குநா் எம்.சேகா் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா்.
தொடா்ந்து தொழிற்சாலையை பாா்வையிட்ட அமைச்சா் தா.மோ.அன்பரசன் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்தாா்.
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மணிபாலன், மாவட்ட நிா்வாகி பாஸ்கரன், நகர செயலாளா் அறிவழகன், பெரியபுலியூா் ஊராட்சி முன்னாள் தலைவா் சுஜானா சுதாகா், திமுக இளைஞா் அணி நிா்வாகி முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.