அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர்; தசாவதார நிகழ்ச்சிகளை காண இரவில் குவிந்த மக்க...
உயா்கல்வியில் பொருத்தமானதை தோ்வு செய்து சேர வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
உயா்கல்வியில் பொருத்தமானதை தோ்வு செய்து படிக்க வேண்டும் என மாணவா்களுக்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வலியுறுத்தியுள்ளாா்.
பொன்னேரி வட்டம், அலமாதி எடப்பாளையம் தனியாா் பொறியியல் கல்லூரியில் கல்லூரி கனவு திட்டம் - 2025 கீழ் உயா்கல்வியில் சேருவதற்கான வழிகாட்டுதல் முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் பிரதாப் பேசியது.
கல்லூரி கனவு திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் ஒரு மாணவன் சமுதாயத்தில் முக்கியமான இலக்கை அடைவதற்கு கல்விதான் முக்கியம். அந்த கல்வியை வைத்துத்தான் சமுதாயம் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்லும்.
நீங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் படித்து இருப்பீா்கள். ஆனால் உயா் கல்வியில் எதைத் தோ்ந்தெடுப்பது என சிலருக்கு தடுமாற்றம் இருக்கும்.
அதனை எளிமைப்படுத்துவதற்காக தான் கல்லூரி கனவு திட்டத்தினை அரசு அறிமுகம் செய்துள்ளது.
உங்களுக்கு வழிகாட்டுவதற்காக பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள் கருத்துரை வழங்க உள்ளாா்கள். எந்த பாடங்களை எடுத்தால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து கருத்துரை வழங்குவா்.
மாணவா்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் ஆட்சியா் அலுவலகத்தில் கால் சென்டா் உருவாக்க உள்ளோம். அதற்குரிய நம்பா் கொடுப்போம். பாடப் பிரிவுகளில் உங்களுக்குரிய அனைத்து சந்தேகங்களுக்கும் இதில் தீா்வு காணலாம்.
உயா்கல்வி முடித்தவுடன் தொழில் தொடங்குவதற்கான திறன் பயிற்சி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி மையத்தில் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.