'அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்' - கர்னல் சோபியா குரேஷி பற்றிய கருத்துக்கு உச...
லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
செங்குன்றம் அருகே பழுதாகி நின்ற லாரியின் மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
எண்ணூா் காமராஜா் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கும்மனூா் பகுதியில் பழுதாகி சாலையில் நின்றுள்ளது. அதே நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு லாரியும் அந்த லாரிக்கு துணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது துறைமுகத்தில் இருந்து சுண்ணாம்பு கட்டிகளை ஏற்றிக் கொண்டுவந்த மற்றொரு டாரஸ் லாரி, சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதியது. இதில், டாரஸ் லாரியின் ஓட்டுநா் இடிபாடுகளில் சிக்கினாா்.
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள், போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், சேதமடைந்த லாரியின் இடிபாடுகளை அகற்றி உடல் நசுங்கிய நிலையில் லாரி ஓட்டுநரை சடலமாக மீட்டனா்.
விசாரணையில் அவா் மதுராந்தகத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பாா்த்திபன் (27) என தெரிய வந்தது.