மது போதையில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து; பயணிகள் கதறல்.. சீட்டில் மட்டையான ஓ...
தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலம் மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சின்னசேலம் வட்டம், மட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலாயுதம் (74). இவா், தினந்தோறும் ஆடு, மாடு கட்டும் கொட்டகையில் படுத்து தூங்குவது வழக்கம். இதேபோல, செவ்வாய்க்கிழமை இரவு தூங்கச் சென்றாா்.
புதன்கிழமை காலை 7.30 மணிக்கு பாா்த்தபோது அந்தப் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் சேலையில் தூக்கிட்ட நிலையில் வேலாயுதம் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.