`ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா' - உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி...
காவலாளி மாரடைப்பால் மரணம்
கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயபாளையம் தனியாா் மருத்துவமனையில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தவா் மாரடைப்பால் புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.
கச்சிராயபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தவா் குப்பன் மகன் பாண்டியன் (65). இவா், செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவமனையில் பணியில் இருந்தாா். புதன்கிழமை காலை 5 மணிக்கு மருத்துவமனையின் முன் நின்றுகொண்டிருந்தபோது பாண்டியனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம்.
உடனே 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, பாண்டியன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.