அதிரடியாக விலையுயர்ந்த ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்!
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் என்றழைக்கப்படும் எச்இவியின் விலையை அதிரடியாக உயர்ந்துள்ளது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் பிரபலமான செடான் வரிசையில் குறிப்பிடத்தக்க ஒன்று ஹோண்டா சிட்டி. அவ்வப்போது ஹோண்டா சிட்டியில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி அடுத்தடுத்த தலைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது ஹோண்டா நிறுவனம்.
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் அதன் விலையை திடீரென உயர்த்தியுள்ளது மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மேலும் இந்த உயர்வானது ஹூண்டாய் வெர்னா ZX வேரியண்டிற்கும் பொருந்தும்.
சிட்டி ஹைப்ரிட் தனது விலையை ரூ. 29,900 அதிகரித்துள்ளதையடுத்து, ஹோரூம் விலையை ரூ. 20.85 லட்சமாக உயர்ந்துள்ளது. 2022இல் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அதன் விலை ரூ. 19.50 லட்சம் இருந்தது.
சிட்டி ஹைப்ரிட் என்றழைக்கப்படும் ஹோண்டா சிட்டி இ:ஹெச்இவி காரில் 120 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் பெட்ரோல்-எலக்ட்ரிக் ஹைப்ரிட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் சிட்டியின் நிலையான மாடலில் 121 ஹெச்பி பீக் வரை வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ARAI சான்றளிக்கப்பட்டுள்ளது. மைலேஜ் 27.1kmpl வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.