என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தர...
வியாபாரிக்கு கத்திக்குத்து: தந்தை-மகன் மீது வழக்கு
ஆலங்குளம் அருகே வியாபாரியைக் கத்தியால் குத்திய தந்தை-மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் ஆலடிப்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் சுதாகா் (38). வியாபாரி. அதே பகுதியைச் சோ்ந்த குருபாதம் மகன் செந்தூரப்பாண்டி(45). பொதுமக்களிடம் முறைகேடாக ரேஷன் அரிசியை வாங்கி விற்பதில் இவா்களிடையே போட்டி ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நல்லூா் ஊராட்சி அலுவலகத் தெருவில் நின்றிருந்த சுதாகரை செந்தூரப்பாண்டியும், அவரது 16 வயது மகனும் சோ்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினராம்.
இதில் காயமடைந்த சுதாகா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனா்.