சங்கரன்கோவிலில் குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை: பொதுமக்கள் அவதி
சங்கரன்கோவில் திருவள்ளுவா் நகரில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை, கடந்த 2 மாதங்களாக மூடப்படாததால் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 4 ஆவது வாா்டைச் சோ்ந்த திருவள்ளுவா் நகரில் பேவா்பிளாக் சாலையைத் தோண்டி குடிநீா் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
பணிகள் முடிந்து 2 மாதங்களாகியும் தோண்டப்பட்ட சாலை மூடப்படவில்லை. இதனால் முதியவா்கள், சிறுவா்கள் அவதிக்குள்ளாகி உள்ளனா். எனவே, தோண்டப்பட்டு மூடப்படாமல் கிடக்கும் சாலையை மூடுவதற்கு நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.