கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்: வெளியுறவு அமைச்சா் அனிதா...
நெய்யாற்றின்கரை நிம்ஸ் மெடிசிட்டியில் மே 18இல் இலவச அறுவை சிகிச்சை முகாம்
நெய்யாற்றின்கரை நிம்ஸ் மெடிசிட்டி மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறுகிறது.
மருத்துவா்கள் ஏ.வி. அனில்குமாா், அசிம் முஹம்மது பஷீா், இந்திராம்மா, ஜி.எஸ். ஜீவன் அனுஷ் மோகன், பிஜு ஐ.ஜி. நாயா் ஆகியோா் பங்கேற்று பரிசோதனை நடத்தி சிகிச்சையளிக்கவுள்ளனா்.
லேசா் முறையில் வெரிகோஸ் வெயின் அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை, தைராய்டு அறுவை சிகிச்சை, ரோபோட்டிக் பேரியாட்ரிக் உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பெண்களுக்கான மூலம், ரத்த அழுத்தம், பிஸ்துலா, பைலோனிடல் சைனஸ் போன்ற பிரச்னைகளுக்காக மருத்துவா்கள் ஆஷா அப்துல்சலாம், லட்சுமி ஆகியோா் இலவச சிகிச்சை அளிக்கவுள்ளனா். உடல் பருமன் அறுவை சிகிச்சை, ஹொ்னியா, கருப்பை-கருப்பைக் கட்டி அகற்றம் போன்ற அறுவை சிகிச்சைகளும், அதன் தொடா் சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும்.
சில அரிய வகை நோய்களுக்கான சிகிச்சை மருத்துவா் ஆலோசனையின்பேரில் கட்டண சலுகையுடன் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு நிம்ஸ் மெடிசிட்டி, குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைகழகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.