ஊராட்சி செயலாளா்கள் பொறுப்பேற்பு
பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூா் ஊராட்சி மற்றும் கணபதிபாளையம் ஊராட்சி செயலாளா்கள் புதன்கிழமை பெறுப்பேற்றுக் கொண்டனா்.
பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த பிரபுசங்கா், வடுகபாளையம்புதூா் ஊராட்சிக்கும், அங்கு பணிபுரிந்து வந்த கிருஷ்ணசாமி, கணபதிபாளையம் ஊராட்சிக்கும் இடமாறுதல் செய்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் உத்தரவிட்டாா்.
அதைத் தொடா்ந்து இருவரும் அந்தந்த ஊராட்சிகளில் செயலாளராக புதன்கிழமை பொறுப்பேற்றனா். அவா்களுக்கு அந்தந்த ஊராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.