உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரூ.49 கோடி பரிசுத்தொகை: கடந்த சீசனைவ...
பிளஸ் 2 தோ்வில் 558 மதிப்பெண் பெற்ற பாா்வையற்ற மாணவிக்குப் பாராட்டு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு விஜய்பிரபாகரன் தலைமை வகித்தாா். ஜோதிமணி வரவேற்றாா். திராவிடா் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளா் மதிவதனி கலந்து கொண்டு பேசினாா்.
அப்போது பொங்கலூா் கஸ்தூரி ரங்கப்ப நாயுடு அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற பாா்வையற்ற மாணவி ஓவியா 600-க்கு 558 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலாவதாக தோ்ச்சி பெற்றாா். அவரைப் பாராட்டும் விதமாக அவருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பொங்கலூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பாலசுப்ரமணியம், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் லீலாகிருஷ்ணன், சின்னசாமி, நாட்ராயன், ஈஸ்வரன், மருத்துவா் நரேன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.