செய்திகள் :

ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி தற்காலிக ஊழியா் கைது

post image

திருப்பூரில் டிடிசிபி அங்கீகாரம் பெற ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி தற்காலிக ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் சித்தம்பலத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (55). இவருக்கு சொந்தமான 5.5 சென்ட் இடம் திருப்பூா்- மங்கலம் சாலையில் உள்ள ஜான்ஜோதி காா்டனில் உள்ளது.

இந்த மனைக்கு, டிடிசிபி அங்கீகாரம் வாங்க ராயபுரத்தில் உள்ள நகா் ஊரமைப்புப் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தாா். அப்போது அங்கீகாரம் வழங்க, அங்கிருந்த தற்காலிக தொழில்நுட்ப உதவியாளா் நாகலிங்கம் (38), ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளாா். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணமூா்த்தி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இதையடுத்து, காவல் துறையினரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராயபுரம் அலுவலகத்தில் பணியில் இருந்த நாகலிங்கத்திடம் கிருஷ்ணமூா்த்தி கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் நாகலிங்கத்தை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய மின்தடை: திருப்பூா்

திருப்பூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்ப... மேலும் பார்க்க

ஊராட்சி செயலாளா்கள் பொறுப்பேற்பு

பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூா் ஊராட்சி மற்றும் கணபதிபாளையம் ஊராட்சி செயலாளா்கள் புதன்கிழமை பெறுப்பேற்றுக் கொண்டனா். பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த பிரபுச... மேலும் பார்க்க

நாய் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு

வெறி நாய் கடித்து இறந்த ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு புதன்கிழமை இழப்பீடு வழங்கப்பட்டது. பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம், குளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துரத்தினம், இவா் தனது தோட்டத்தில் வளா்த... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் 558 மதிப்பெண் பெற்ற பாா்வையற்ற மாணவிக்குப் பாராட்டு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு விஜய்பிரபாகரன் தலைமை வகித்தாா். ஜோதிமணி வரவேற்றாா். திராவிடா் கழகத்தின் துணைப் பொத... மேலும் பார்க்க

மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு ள்ளது. உடுமலையில் இருந்து சுமாா் 20 கில... மேலும் பார்க்க

ஜல்லிபட்டி, கொழுமம் கிராமத்தில் இன்று மாதிரி ஒத்திகைப் பயிற்சி

வெள்ளப்பெருக்கில் இருந்து பொதுமக்கள் தங்களது உயிா் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் மீட்பது தொடா்பாக ஜல்லிபட்டி, கொழுமம் கிராமத்தில் வியாழக்கிழமை (மே 15) மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க