Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங...
மாா்த்தாண்டத்தில் 258 பள்ளி வாகனங்கள் ஆய்வு
தக்கலை அருகே கோழிப்போா்விளையில் உள்ள மாா்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 258 பள்ளி வாகனங்களை சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா செய்தாா்.
இந்த அலுவலகத்தில் போக்குவரத்து, வருவாய், காவல், கல்வித் துறை, தீயணைப்பு ஆகிய துறைகள் மூலம் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணி சாா் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்தீபன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுரேஷ்பாபு, ஆய்வாளா் ராஜேஷ், மாவட்ட தனியாா் பள்ளிக் கல்வி அலுவலா் அஜிதா, தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலா் ஜீவன்ஸ், துறைசாா் அலுவலா்கள் பங்கேற்றனா். முதல்கட்டமாக 258 வாகனங்களை ஆய்வு செய்து, குறைகள் கண்டறியப்பட்ட 27 வாகனங்கள் திருப்பியனுப்பப்பட்டன.
இதுகுறித்து சாா் ஆட்சியா் கூறும்போது, மாா்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள 198 பள்ளிகளில் 863 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதில் முதல்கட்டமாக 258 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன என்றாா்.