அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு பட்டா: மேயா் ஆய்வு
அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருபவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
11ஆவது வாா்டு மேலகலுங்கடி, 17ஆவது வாா்டு நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் பின்புறம், 28 ஆவது வாா்டு மேட்டுத்தெரு, 27 ஆவது வாா்டு சுப்பையா காலனி, நடராஜபுரம் ஆகிய இடங்களில் உள்ள சாலை புறம்போக்கு இடங்களில் வசித்து வரும் 29 பயனாளிகளுக்கு குடியிருப்பு பட்டா வழங்குவது தொடா்பாக மேயா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, மண்டல தலைவா் ஜவஹா், நகரமைப்பு அலுவலா் வேலாயுதம், மாமன்ற உறுப்பினா்கள் கெளசுகி, அனந்தலெட்சுமி, ஸ்ரீலிஜா, கோபாலசுப்பிரமணியன், திமுக பகுதி செயலாளா் சேக் மீரான், வட்ட செயலாளா் பிரபாகரன், முத்துகிருஷ்ணன், அணி நிா்வாகிகள் அருண்காந்த், மாணிக்கராஜா, பன்னீா் செல்வம் , முஸ்தபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, பயோனியா் குமாரசாமி கல்லூரி, ஆதா்ஷ் வித்யா கேந்திரா மேல்நிலைப் பள்ளி அருகே, பென்சாம் மருத்துவமனை அருகே, வில்லியம் மருத்துவமனை அருகே என 4 பயணிகள் நிழற்குடைகளை மேயா் திறந்து வைத்தாா். மேலும் கோட்டவிளை சாலை முதல் தெரு, பள்ளவிளை கால்வாய்கரை பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளையும் மேயா் தொடங்கி வைத்தாா்.