Tariff-ஐ அதிகரித்த Trump; மருந்துகளின் விலை உயருமா | IPS Finance - 208 | Sensex ...
மாயமான முதியவா் மீட்பு
மாா்த்தாண்டம் அருகே மாயமான முதியவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
மாா்த்தாண்டம் அருகே பள்ளியாடி, சேரிக்கடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (76). இவா் கடந்த 5 ஆம் தேதி நட்டாலம், நேசா்புரம் பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சென்றவா் அதன் பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை பல இடங்களில் தேடி வந்தனா்.
இந்நிலையில், அவா் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது.
அவரை போலீஸாா் கண்டுபிடித்து மீட்டு மகளுடன் அனுப்பி வைத்தனா்.