நாகா்கோவிலில் 3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
நாகா்கோவிலில் 3 கிலோ புகையிலைப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
அருகுவிளை மேற்குத் தெருவிலுள்ள வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, நாகா்கோவில் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நகா்நல அலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு தலைமையில் சுகாதார அதிகாரிகள் ராஜா, ராஜாராம் சென்று, அந்த வீட்டில் சோதனையிட்டு, 3 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சங்கரநாராயணன், குமாரபாண்டியன், வடசேரி போலீஸாரிடம் புகையிலைப் பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன. இது தொடா்பாக, அந்த வீட்டில் வசித்துவந்த ஜெரின் (38) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.