செய்திகள் :

ஜம்மு-காஷ்மீர்: நான்கு மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் மூடல்!

post image

ஜம்மு: ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் ​​மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மீண்டும் புதன்கிழமை(மே 14) மூடப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநரகத்தின் உத்தரவில் பள்ளிகள் மூடலுக்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் கூறப்படவில்லை.

இதுதொடர்பாக கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் ​​மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் புதன்கிழமை மூடப்படும். இருப்பினும், கதுவா மாவட்டத்தின் உதம்பூர் மற்றும் பானி, பஷோலி, மகான்பூர், பட்டு, மல்ஹார் மற்றும் பில்லாவர் மண்டலங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா்கள் சாதனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களின் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது இந்திய ராணுவம் கடந்த மே 6 ஆம் தேதி நள்ளிரவு அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்ட இந்த தாக்குதல்களின் மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் அரசாங்கம் கூறியிருந்தது.

பாகிஸ்தானின் அடுத்தடுத்த ராணுவ ஆக்கிரமிப்பை இந்திய ஆயுதப்படைகள் திறம்பட முறியடித்தன மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல விமான தளங்களைத் தாக்கின.

இந்த நிலையில், இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக மே 12 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். ஹாட்-லைன் தொலைபேசி வழியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையை அடுத்து துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் பதவியேற்பு

புதுதில்லி: உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பி.ஆர். கவாய்க்கு குடியரசுத் தலைவர... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை (புதன்கிழமை) அதிரடியாக குறைந்துள்ளது.இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணமாக கடந்த வாரம் தங்கத்தின் விலை திடீர் ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. தற்போது பதற்றம் ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!

புது தில்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ஏர்டெல் சேவையில் பாதிப்பு! பயனர்கள் அவதி!

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். ஏர்டெல் சேவை முடக்கப்பட்டதா? அதில் என்ன பிரச்னை? என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏ... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டிற்கான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்ப்பு!'

தமிழ்நாட்டிற்கான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது அநீதியானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து பிற பகுதிகளுக்கு இயக்குவத... மேலும் பார்க்க

'நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!' - மு.க. ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில்!

பொள்ளாச்சி தீர்ப்பு குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கருத்து கூறியுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை ந... மேலும் பார்க்க