அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் தயக்கம்: அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்கள்! ...
வசந்த மண்டபத்தில் நரசிம்ம பூஜை!
திருமலையில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருமலையில் சித்திரை மாத பெருவிழாவின் ஒரு பகுதியாக, நரசிம்மரின் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நேரடியாக ஒளிபரப்பியது.
இதற்காக சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி நரசிம்மா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். சுதா்சன சக்கரம் மற்றும் நரசிம்மசுவாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்யப்பட்டது.
பூஜையின் ஒரு பகுதியாக ஸ்ரீ நரசிம்ம மந்திரம் 108 முறையும், ஸ்ரீ ந்ரிசிம்ம அஷ்டோத்தர ஷதநாமாவளி மற்றும் ஸ்ரீ சுதா்சன மந்திரம் 24 முறையும் ஓதப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோயில் அா்ச்சகா்கள், தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தின் அறிஞா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.