பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு!
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.
வார இறுதி நாள்களை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 85,078 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 35, 791 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.67 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.