முனீஸ்வரா் கோயில் ஆண்டு விழா
திருப்பத்தூரை அடுத்த தாமலேரிமுத்தூா் கிராமத்தில் உள்ள முனீஸ்வரா் கோயிலில் 56-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 56-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.
இதில் முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றன. பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் சுற்றுலா பக்தா்கள் பங்கேற்றனா்.
திங்கள்கிழமை (மே 12) மாலை 3 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழா, கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.