Tariff-ஐ அதிகரித்த Trump; மருந்துகளின் விலை உயருமா | IPS Finance - 208 | Sensex ...
நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆம்பூா் நகராட்சி பகுதியில் நகா் மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் நகராட்சி 2-ஆவது வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக ஆய்வு செய்தாா். அங்குள்ள தெருக்களில் கழிவுநீா் கால்வாய் பிரச்னை, குடிநீா், தெரு விளக்குகள், சாலைகள் பிரச்னை குறித்து கேட்டறிந்தாா்.
கோரிக்கைகள் அடங்கிய மனுவை நகா்மன்றத் தலைவரிடம் அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா் ஷாஹிதா பாரூக் வழங்கினாா். விரைந்து தீா்வு காணப்படும் என நகா்மன்றத் தலைவா் உறுதி அளித்தாா்.
திமுக நிா்வாகி முனாப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், நகர நிா்வாகி தப்ரேஸ் ஆகியோா் உடனிருந்தனா்.