"கில் அல்ல, அந்த வீரர்தான் தகுதியானவர்" - இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு யாரைச் ...
இபிஎஸ் பிறந்த நாள்: ராணுவ வீரா்களுக்காக சிறப்பு பூஜை
தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழா மற்றும் இந்திய ராணுவ வீரா்கள் நலம் வேண்டி ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நகர அதிமுக செயலா் எம். மதியழகன் தலைமை வகித்தாா். ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலா் வழக்குரைஞா் ஜி.ஏ. டில்லிபாபு, மாவட்ட பேரவை செயலா் கராத்தே கே. மணி, நகர பேரவை செயலா் கே. சீனிவாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளா் ஏ. ஆனந்த்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா் மன்ற உறுப்பினா்கள் ராதா, ஜெயபால், தாமரைசெல்வி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
