மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனை
மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை நடைபெறும். அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக குவிந்தன. அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனா். இதில் சிறிய ஆடுகள் ரூ. 4,000 முதல் ரூ. 7,000 வரையும், பெரிய ஆடுகள் ரூ. 8,000 முதல் ரூ. 12,000 வரையும் விற்பனை செய்யப்பட்டன.
வாரச்சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் என ரூ. 38 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.