ஜம்முவில் வீட்டை தகா்த்த குண்டு: அபாய எச்சரிக்கை ஒலியால் உயிா் தப்பித்த குடும்ப...
கொல்லங்கோடு அருகே விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வெள்ளிக்கிழமை இரவு, பைக் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.
கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த ஜான்பிரகாசம் மனைவி பெல்சிட்டாள் (53). ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாா்த்து வந்த இவா், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
அவா் வெள்ளிக்கிழமை இரவு கச்சேரிநடை பகுதியிலிருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பைக்கின் பின்னால் காா் மோதியதாம். அந்தக் காா் சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரத்தடிகள் மீது மோதி நின்றது.
விபத்தில், பெல்சிட்டாளின் கால் துண்டானது. உயிருக்குப் போராடிய அவரை அப்பகுதியினா் மீட்டு பாறசாலை பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான கொல்லங்கோடு வெங்கஞ்சி, மிளகுநின்றவிளையைச் சோ்ந்த அஜின் (30) என்பவரைக் கைது செய்தனா். பெல்சிட்டாளின் சடலம் கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.