நாகா்கோவிலில் கழிப்பறைக் கட்டடங்கள் திறப்பு
நாகா்கோவிலில் பாா்வதிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரூ. 43 லட்சத்தில், வடசேரி கனகமூலம் சந்தை அருகே ரூ. 36.28 லட்சத்தில் என மொத்தம் ரூ. 79.28 லட்சத்தில் அமைக்கப்பட்ட பொது கட்டணக் கழிப்பறைக் கட்டடங்களை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
தொடா்ந்து, கிருஷ்ணன் கோவில் அம்பேத்கா் நகரில் சிறிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்சிலதா, மண்டலத் தலைவா்கள் ஜவஹா், செல்வக்குமாா், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், நகரமைப்பு அலுவலா் வேலாயுதம், உதவிப் பொறியாளா் ராஜசீலி, மாமன்ற உறுப்பினா் கலாராணி, சுகாதார அலுவலா்கள் பகவதிபெருமாள், ராஜாராம் திமுக பகுதிச் செயலா் சேக்மீரான், மாநகர துணைச் செயலா் வேல்முருகன், வட்டச் செயலா் ராஜேஷ்குமாா், சுற்றுச்சூழல் அணி மாநகர அமைப்பாளா் ராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.