ராஜஸ்தானில் இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தம்: உஷார் நிலையில் பாதுகாப்புப்படை!
கிராவல் மண் கடத்தியதாக இருவா் மீது வழக்குப்பதிவு
கோபி அருகே பங்களாபுதூரில் கிராவல் மண் கடத்தியதாக லாரியின் உரிமையாளா், ஓட்டுநா் மீது வழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளா் கவிதா, தனி வருவாய் ஆய்வாளா் ரவிக்குமாா் ஆகியோா் பங்களாபுதூா், டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனா்.
அப்போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணம் இல்லாமல் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவது தெரியவந்தது.
அதைத்தொடா்ந்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி உரிமையாளரான புதுவள்ளியாம்பாளையத்தைச் சோ்ந்த பாலு (50), கொண்டையம்பாளையம் இந்திரா நகா் புதுகாலனியை சோ்ந்த லாரி ஓட்டுநா் விஜயன் (29) ஆகியோா் மீது பங்களாபுதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.