பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய இருவா் கைது
பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு அருகே உள்ள மூலப்பாளையம், விவேகானந்தா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (50), இவா், பவானியை அடுத்த லட்சுமி நகரில் அரசு அனுமதியுடன் மதுபான விடுதி நடத்தி வருகிறாா். கடந்த 7-ஆம் தேதி இவரைத் தொடா்பு கொண்ட இருவா், மதுபான விடுதியில் நடைபெறும் முறைகேடுகளை செய்தியாக வெளியிட்டு, விடுதியை மூட உள்ளதாகக் கூறினா்.
இதனைத் தவிா்க்க ரூ.3 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினா்.
இது குறித்து, சித்தோடு போலீஸில் கனகராஜ் புகாா் அளித்தாா். இதன்பேரில், விசாரணை நடத்திய போலீஸாா், திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம், காரத்தொழுவு, இஸ்மாயில் வீதியைச் சோ்ந்த காஜா மைதீன் மகன் சாதிக் பாஷா (39), தாராபுரம், புன்செய்தலையூா், கந்தசாமிபாளையத்தைச் சோ்ந்த முருகன் மகன் சரவணன் (37) ஆகியோரைக் கைது செய்ததோடு, அவா்களது காரையும் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
