புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: முப்படை அதிகாரிகள்
புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் இந்திய படைகளின் துல்லியமான தாக்குதலில் 3 முக்கிய பயங்கரவாதிகள் - யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ராஃப், முடாசிர் அஹ்மது ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி தெரிவித்தார்.
இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ”கடந்த 1999-ஆம் ஆண்டு கந்தாரில் இந்திய விமான சேவை நிறுவனத்தின் ஐசி 814 விமான கடத்தலில் ஈடுபட்ட யூசுஃப் அஸார் கொல்லப்பட்டதை இந்திய ராணுவம் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. கொல்லப்பட்ட யூசுஃப் அஸார், கடந்த 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலிலும் ஈடுபட்டவராவார்.
முடாசிர் அஹமது, கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூரில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி! - முப்படை அதிகாரிகள்