ராஜஸ்தானில் இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தம்: உஷார் நிலையில் பாதுகாப்புப்படை!
புது தில்லி: ராஜஸ்தானில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இரவில் ட்ரோன், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் எதிரிகள் தாக்குதல்களைத் தொடுத்தால் எதிர்கொள்ளவும் அவற்றை முறியடிக்கவும் பாதுகாப்புப்படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இந்த சண்டை நேற்றிரவு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 4 நாள்களாக ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப்பில் அசாதாரண சூழல் நிலவியதைத்தொடர்ந்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராஜஸ்தானில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.