செய்திகள் :

12th Result: அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்; அதிகரிக்கும் தேர்ச்சி விகிதம்!

post image

பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கான இந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்திருக்கிறது.

மாணவர்கள்

மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம்

மாணவிகள் - 4,05,472 (96.70%)

மாணவர்கள் - 3,47,670 (93.16%)

இந்த 2025ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்:

1. அரியலூர் - 98.82%

2. ஈரோடு - 97.98%

3. திருப்பூர் - 97.53%

4.கோயம்புத்தூர் - 97.48%

5. கன்னியாகுமரி - 97.01%

அரசுப் பள்ளி மாணாக்கர்களில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்:

1. அரியலூர் - 98.32%

2. ஈரோடு - 96.88%

3. திருப்பூர் - 95.64%

4. கன்னியாகுமரி - 95.06%

5. கடலூர் - 94.99%

மாணவர்கள் |கோப்பு படம்

கடந்த நான்கு ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

2022 - 93.76%

2023 - 94.03%

2024 - 94.56%

2025 - 95.03%

பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

அரசுப் பள்ளிகள் - 91.94%

அரசு உதவி பெறும் பள்ளிகள் - 95.71%

தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.88%

இருபாலர் பள்ளிகள் - 95.30%

பெண்கள் பள்ளிகள் - 96.50%

ஆண்கள் பள்ளிகள் - 90.14%

தேர்வு முடிவு தெரிந்த பின்பும், 'என்ன படிக்கலாம்?', 'எந்தக் கல்லூரியில் சேரலாம்?', 'எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?', 'அதற்கு கல்விக் கட்டணம் எவ்வளவு?', 'அதற்கான உதவித்தொகையை எப்படி பெறலாம்?' என்கிற கேள்விகள் இருந்தால், கவலையே பட வேண்டாம்.

தொலைபேசி எண்: 14417

இந்த எண்ணிற்கு அழைத்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு, தெளிவுப்படுத்தி கொள்ளலாம். உங்கள் மதிப்பெண்ணிற்கு என்ன பாடத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதையும் இதே எண்ணில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

உ.பி., கிராமத்தின் 78 வருடத் தவிப்பு; சோலார் விளக்கின் ஒளியில் கனவை நனவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!

மதத்தின் பெயரில், சாதியின் பெயரால், மொழியின் பெயரால், பாலினத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, சக மனிதனுக்கெதிராக இன்னொரு சக மனிதனை முன்னிறுத்தித் துண்டாடப்பட்டிருக்கும் சமூகத்தை, வேற்றுமை களைந்த அற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: மும்மொழிக் கொள்கையின் கீழ் 1 முதல் 5-வது வகுப்பு வரை இந்தி கட்டாயம்!

மத்திய அரசு புதிய கல்வித்திட்டத்தின் கீழ் மும்மொழிக் கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிரா அரசு மத்திய அரசின் மும்மொழி... மேலும் பார்க்க