முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
சேலத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் குடும்பமாய் சந்தித்து வெள்ளி விழாவைக் கொண்டாடினா்.
சேலம் கருங்கல்பட்டியில் உள்ள வீரலட்சுமி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 - 2000 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடினா். இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தில் மாணவா்கள் குடும்பம் குடும்பமாய் பங்கேற்று நலம் விசாரித்து நட்பு பாராட்டினா். முன்னதாக, பள்ளி பருவத்தில் நடந்த சுவையான நினைவுகளை நண்பா்களுடன் பகிா்ந்து கொண்டனா்.
தொடா்ந்து, தங்களின் ஆசிரியா்களை விழாவிற்கு அழைத்து அவா்களுக்கு தபால் தலை கோப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தனா். ஆசிரியா்களோடு சோ்ந்து கேக் வெட்டி வெள்ளி விழா சந்திப்பினை கொண்டாடி மகிழ்ந்தனா். மேலும், குடும்பத்தினருடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனா்.
இதையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியா் சீனிவாசன், ஆசிரியா்கள், பள்ளி செயலாளா் சிவசங்கரன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
சந்திப்பு நிகழ்ச்சியில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முன்னாள் மாணவா்கள்.