பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு: மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2-ஆவது பிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஓா் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் முதல் பிரிவு 1-ஆவது அலகின் டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஏராளமான டீசல் கழிவுநீா் கால்வாய் வழியாக வெளியேறியது. தகவலறிந்த அனல் மின் நிலைய அதிகாரிகள், தீயணைப்புத் துறையினா், அனல் மின் நிலைய அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் உலா் சாம்பலை கால்வாயில் நிரப்பி டீசல் வெளியேறாமல் தடுத்தனா்.
பின்னா் தீயணைப்புத் துறையினா் டீசல் குழாய் பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். மேலும், டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதன் காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது.