கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
சித்ரா பௌா்ணமி: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
சேலம்: சித்ரா பௌா்ணமியையொட்டி சேலம் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிவன், சொா்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, காசி விஸ்வநாதா் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில், தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், எல்லைப் பிடாரியம்மன் கோயில், குகை காளியம்மன், மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோயில், தோ்நிலையம் ராஜகணபதி கோயில், குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயில், நெத்திமேடு காளியம்மன் கோயில், காவடி பழனியாண்டவா் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.