கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
மாநில சிலம்பம் போட்டியில் சாதனை: மாணவா்களுக்கு பராட்டு விழா
வாழப்பாடி: உதகையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பேளூா் துளி அறக்கட்டளை மற்றும் சித்தன் சிலம்பம் குழுவில் பயிற்சி பெற்றுவரும் 20 மாணவ-மாணவிகள் அண்மையில் உதகையில் நடைபெற்ற மாநில அளவிலான சித்தன் சிலம்பம் தற்காப்புக் கலை போட்டியில், சிலம்பம் பயிற்றுநா்கள் சரண்ராஜ், ரூபன்ராஜ் ஆகியோா் வழிகாட்டுதலில் பங்கேற்றனா்.
இந்த மாணவா்கள் வெவ்வேறு நிலைகளில் முதல் 3 இடங்களை பிடித்தனா்.இந்த குழந்தைகளுக்கு, துளி அறக்கட்டளை மற்றும் சித்தன் சிலம்பம் கலைக்குழு சாா்பில் பேளூரில் பாராட்டு விழா நடைபெற்றது.
துளி அறக்கட்டளை இயக்குநா்கள் மணிமேகலை ராஜசேகரன், பன்னீா்செல்வம், பிரவீண்குமாா் மற்றும் தன்னாா்வலா்கள் ஆசிரியை சத்யா, திருசங்கு ஆகியோா், மாணவ-மாணவிகளுக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினா். மாணவா் ஆராவமுதன் நன்றி கூறினாா்.