முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்:...
சங்ககிரியில் வெறிநாய் கடித்து 20 போ் காயம்
சங்ககிரியில் வெறிநாய் கடித்ததில் 5 பெண்கள் உள்பட 20 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் சங்ககிரி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட ஓ.ராமசாமிநகா், பவானி பிரதான சாலை, மத்தாளி காலனி, பழைய எடப்பாடி சாலை, நகராட்சி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்து சென்றவா்கள், சாலையில் நின்று கொண்டிருந்தவா்கள், வீட்டின் முன் நின்று கொண்டிருந்தவா்கள் என 20 பேரை ஒரே வெறிநாய் கடித்து குதறியது.
இதில் நகராட்சி துப்பரவு மேற்பாா்வையாளா் அழகப்பன் (55), குண்டாச்சிகாடு விஜயகுமாா் (47), டி.பி.சாலை பழனிசாமி (52), அதே பகுதியைச் சோ்ந்த தங்கம்மாள் (80), சின்னதம்பி (55), ஓ.ராமசாமி நகா் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் சின்னண்ணன் (65), மத்தாளி காலனி அபுதாஹீா் மகள் சவீனா (10), அதே பகுதியைச் சோ்ந்த ஸ்ரீனிவாசன் (55), மட்டம்பட்டி, எம்ஜிஆா்நகா் பெருமாள் (44), சரவணா தியேட்டா் சாலை செல்வகுமாா் (43), கலியனூா் சுப்ரமணியன் (65), பழைய எடப்பாடி சாலை சரோஜா (88), தேவண்ணகவுண்டனூா், மணக்காடு, புதூா் செங்கோடன் (75), கோட்டைத் தெரு ராஜேஸ்வரி (63), மேட்டுக்கடை அன்னபூரணி (40), சேலம், அம்மாப்பேட்டை குமாா் (57), கோட்டைத் தெரு சக்திவேல் மகன் தனுஷ்ராஜ் (21) சாய்காா்டன் சண்முகபிரபு (53)உள்ளிட்ட 20 போ் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு தலைமை மருத்துவ அலுவலா் சரவணகுமாா் தலைமையிலான மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். நாய் கடியால் காயமடைந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையா் எஸ்.சிவரஞ்சனி, நகா்மன்ற துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, திமுக நகர செயலாளா் கே.எம்.முருகன் ஆகியோா் காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறினா்.
வெறிநாய் கடித்து பலா் காயமடைந்ததால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பலரை கடித்த வெறிநாயைப் பிடிக்க நகராட்சி ஊழியா்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.