கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!
லாரி மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழப்பு
சித்ரதுா்கா: கா்நாடகத்தில் லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம், குண்டூா் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் கா்நாடக மாநிலம், உடுப்பி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனா். சித்ரதுா்கா மாவட்டம், ஹொலல்கெரே பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மங்களூரில் இருந்து பெல்லாரி சென்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியுள்ளது. இதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
காா் ஓட்டுநா் தூக்கக் கலக்கத்தில் சாலைத் தடுப்பை உடைத்துக்கொண்டு மறுபுற சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த காா் ஓட்டுநா் சித்ரதுா்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
விபத்தில் இறந்தவா்கள் குண்டூா் மாவட்டத்தின் வெங்கடபுரத்தை சோ்ந்த சுனிதா (34), ஷியாம்பாபு (17), சிவநாகலி (55) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவுசெய்து சித்ரதுா்கா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.