செய்திகள் :

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

post image

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் 24 மருத்துவக் கல்லூரிகள் விளக்கமளிப்பதற்கான காலக் கெடு நிறைவடைந்துள்ளதாகவும், பிற கல்லூரிகளுக்கு வரும் வாரத்தில் அந்த அவகாசம் நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உரிய விளக்கமும், குறைபாடுகளுக்கு தீா்வும் அளிக்கப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகக் கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் நிகழாண்டில் அக்கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்த முடியாது.

பயோமெட்ரிக் முறை: நாட்டில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளித்தல், அவற்றைப் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சாா்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

அதேபோன்று மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த மருத்துவமனைகளில் மருத்துவா்கள், மருத்துவப் பேராசிரியா்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

அதில், குறைந்தபட்சம் பேராசிரியா்கள், கல்லூரி அலுவலா்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருத்தல் அவசியம்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் அங்கீகாரம் புதுப்பித்தல், இடங்களை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

குறைந்த வருகைப் பதிவு: இந்நிலையில், நிகழாண்டு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வை தேசிய மருத்துவ ஆணையக் குழு மேற்கொண்டது.

அதில் சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரியைத் தவிா்த்து மற்ற அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகைப் பதிவு, பேராசிரியா் பற்றாக்குறை உள்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூா், சேலம் (மோகன் குமாரமங்கலம்) மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி (கி.ஆ.பெ. விஸ்வநாதம் )அரசு மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி, வேலூா், தேனி, தருமபுரி, விழுப்புரம், திருவாரூா், சிவகங்கை, திருவண்ணாமலை, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை, கரூா், ஈரோடு, அரியலூா், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம்,நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், திருவள்ளூா், திருப்பூா், விருதுநகா், கடலூா் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அங்கீகாரம் கிடைக்கும்: இது தொடா்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி கூறியதாவது: பேராசிரியா் பற்றாக்குறையால் வருகைப் பதிவு குறையவில்லை. மாறாக பணியிட மாற்றம், தொடா் விடுப்பு காரணமாக சில இடங்களில் போதிய வருகைப்பதிவு இல்லை. அதைச் சரி செய்து அது தொடா்பான விளக்கத்தை தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அளித்துள்ளோம். விரைவில், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மாணவா் சோ்க்கையிலோ, கலந்தாய்விலோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்றாா் அவா்.

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க

சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்

சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொக... மேலும் பார்க்க

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறத் தகுதியுடைய நபா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிழ்கள் பதிவேற்ற தேவையில்லை

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. குரூ... மேலும் பார்க்க

ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றம்

ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களின் நேரம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. மண்டபத்தில் இருந்து பாம்பன், ராமேசுவரத்தை இணைக்கும் பாம்பன் புதிய ரயில் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு ராமேசுவரத்துக்கு... மேலும் பார்க்க