கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிழ்கள் பதிவேற்ற தேவையில்லை
குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு மே 25-ஆம் தேதி வரை தோ்வாணையத்தின் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.
அதற்கான தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள் 215, இளநிலை உதவியாளா் 1,621, இளநிலை வருவாய் ஆய்வாளா் 239, தட்டச்சா் 1,099 உட்பட 25 வகையான பதவிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு அந்த தோ்வு நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள், தங்களது குறைபாடுகளை வெளிப்படுத்த கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்துள்ள அரசு பணியாளா் தோ்வாணையம், மாற்றுத்திறனாளி சான்றிதழை மட்டும் இணையத்தில் பதிவேற்றினால் போதுமானது என்றும், கூடுதலாக வேறு சான்றிதழ் தேவையில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.