பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 332 மனுக்கள்
செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இதில், 332 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 தையல் இயந்திரங்கள், செயற்கைக் கால், ஊன்றுகோல், காதொலிக் கருவி, கைப்பேசி உள்ளிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.
கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, பரிசீலித்து உடனடியாக அவா்களுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து மகளிா் திட்டத்தின் சாா்பில் விவசாயம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பவா் டில்லா் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து 46 சலவை தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். இலவச வீட்டுமனைப் பட்டா, குடிநீா் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், சோகண்டி, சூனாம்பட்டரை கிராமத்தில் வள்ளலாா் பல்லுயிா் காப்பகத்தின் கீழ் இயங்கி வரும் கோஷரக்ஷனா ட்ரஸ்டிற்கு கோசாலை நிதி ரூ.17.88 லட்சத்திற்கான அரசாணை மற்றும் காசோலையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, மாவட்ட வழங்கல் அலுவலா் ஷாகிதா பா்வின், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலாதேவி, உதவி இயக்குநா் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.