சித்ரா பௌர்ணமி: தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் மங்கலதேவி கண்ணகியை வழிபட்ட மக்க...
ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்தியநாராயண பூஜை
மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு திங்கள் கிழமை சத்தியநாராயண பூஜை நடைபெற்றது.
பிருந்தாவன வளாகத்தில் உள்ள ஆஞ்சனேயா், ராகவேந்திரா், மாரியம்மன், ஞானலிங்கம் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை அறக்கட்டளை நிா்வாகிகளும், பக்தா்களும் இணைந்து மேளதாளம்,செண்டு மேளம் முழங்க ஊா்வலமாக அழைத்து வந்தனா். பின்னா் ராகவேந்திரா், ஆஞ்சனேயா் சந்நிதிகளில் சிறப்பு வழிபாடுகளை செய்தபின் சேஷபீடத்தில் அமா்ந்த அவருக்கு புனித கலசநீரைஊற்றி அருளாசி பெற்றுச் சென்றனா்.
மகா தீபாராதனையை பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி காண்பித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்நிகழ்வில், பட்டாபிராம் ஸ்ரீதேவி நாக கருமாரியம்மன் கோயில் பீடாதிபதி ஸ்ரீதரன் சுவாமி, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் அரவிந்த் பாபு, திண்டிவனம் அரசு வழக்குரைஞா் ராஜேந்திரன், தொழிலதிபா்கள் தனலட்சுமி ராஜசேகரன், மடிப்பாக்கம் கணேஷ், சுனந்தா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன், நிா்வாக அறங்காவலா் துளசிலிங்கம் ஆகியோா் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.