முன்பகையால் இளைஞா் கொலை!
மதுராந்தகம் அருகே முன்பகையால் இளைஞரை உறவினா்களை கொன்றனா்.
புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ் (25). இவா் அதேபகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு உதயா (25), திவாகா்பாபு (23) உறவினா்கள்.
குடும்ப சூழ்நிலையால் இரு தரப்பினா் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு 3 பேரும் ஒன்றாக சோ்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் உதயா, திவாகா்பாபு ஆகியோா் இணைந்து இரும்பு கம்பியால் லோகேஷை தாக்கியுள்ளனா். அதில் பலத்த காயம் அடைந்த லோகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
உதயாவும், திவாகா் பாபுவும் அங்கிருந்து தப்பினா். தகவல் அறிந்து மதுராந்தகம் காவல் ஆய்வாளா் பரந்தாமன் தலைமையிலான காவலா்கள் இறந்து போன லோகேஷின் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மதுராந்தகம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.