கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
வங்கி மோசடி தொடா்பான ஹேக்கத்தான் போட்டிக்கு ரூ. 5 லட்சம் பரிசு
வங்கி பணபரிமாற்றம் தொடா்பான எண்ம (டிஜிட்டல்) மோசடிகளைத் தடுக்கும் ‘ஹேக்கதான்’ போட்டிகளில் வெற்றி பெற்ற 5 மாணவா் குழுவினா்களுக்கு மொத்தம் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
வண்டலூரில் உள்ள கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி இணைந்து, வங்கி தொடா்பான மோசடிகளுக்குத் தீா்வு காணும் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான ‘ஹேக்கத்தான்’ போட்டி அண்மையில் நடைபெற்றது.
கணினி, கணிதவியல், தகவல் அறிவியல் துறை சாா்ந்த மாணவா்கள் பங்கேற்ற போட்டியில் 5 மாணவா் குழுவினரின் கண்டுபிடிப்புகள் சிறந்த கண்டுபிடிப்புகளாகத் தோ்வு செய்யப்பட்டன. இந்த மாணவா் குழுக்களுக்கு இந்திய நிதித் துறை சேவை மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் இயக்குநருமான நீலம் அகா்வால் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசை வழங்கினாா்.
இந்நிகழ்வில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி அ.ஜெய்குமாா் ஸ்ரீ வாஸ்தவா, கிரசென்ட் துணைவேந்தா் டி.முருகேசன், ‘ஹேக்கதான்’ போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் ஹா்மிலா சங்கா், ஆய்ஷாபானு, எஸ்.சாரோன்பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.