மாரியூா் கோயில் சித்திரை திருவிழா: கடலில் வலைவீசும் படலத்துடன் திருக்கல்யாணம்
தில்லையாடி மாரியம்மன் கோயில் தேரோட்டம்
தரங்கம்பாடி: தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 4-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது.
தொடா்ந்து, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளியதும் மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.
தொடா்ந்து பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ரெங்கராஜன், கிராம நிா்வாகிகள், விழா குழுவினா் மற்றும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
தோ் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. ஏராளமான பக்தா்கள் அம்மனுக்கு அா்ச்சனை செய்து வழிபட்டனா்.