செய்திகள் :

ஒசூரில் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூங்கரக ஊா்வலம்

post image

ஒசூா்: ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் அலகு குத்தும் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பக்தா்கள் பூங்கரகம், பால்குடம் எடுத்துவந்தனா்.

ஒசூரில் உள்ள புகழ்பெற்ற கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அலகு குத்து திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு கோயில் திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி பால் கம்பம் நடுதல், காப்புக் கட்டுதல், கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழா நாள்களில் தினமும் அம்மனுக்கு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் மாவிளக்கு எடுத்துவந்து பூஜைகள் செய்து வழிபட்டனா். திங்கள்கிழமை அண்ணா நகா் பகுதியில் அமைந்துள்ள சின்ன கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பூங்கரகம், பால்குடங்களை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

முன்னதாக வட்டாட்சியா் அலுவலக சாலை, பழைய பெங்களூரு சாலை வழியாக கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயிலை ஊா்வலம் வந்தடைந்தது. பின்னா் அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றன. இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா். முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்துவருகின்றனா்.

ரோஜா செடிகளில் நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிக்கொல்லி உரம்

ஒசூா்: ரோஜா செடிகளில் ஏற்படும் பவுடரி மில்ட்யூ நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஒசூா் ஒன்றியம், நல்லூா், எஸ்.முத்துகானப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் ... மேலும் பார்க்க

யானை தாக்கி மூதாட்டி காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் சாக்கம்மாள் (65) என்ற மூதாட்டி காயமடைந்தாா். ஆந்திர மாநிலத்திலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், பி.சி.புதூா் அருகே கடந்த இரு நாள்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கைகளை இழந்த மாணவரின் தாய்க்கு வீட்டுமனை பட்டா ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி: பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இரு கைகளை இழந்த மாணவரின், தாயாருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வா் வி.அனுராதா திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே மா்மவிலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்து விவசாயி வளா்த்து வந்த 5 ஆடுகள் உயிரிழந்தன; மனிதா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்முன் அந்த மா்ம விலங்கை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதும... மேலும் பார்க்க

வரகானப்பள்ளியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஒசூா்: கெலமங்கலம் ஒன்றியம், வரகானப்பள்ளி கிராமத்தில் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஒசூரை அடுத்த கொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வரகான... மேலும் பார்க்க