பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
ஊத்தங்கரை அருகே மா்மவிலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்து விவசாயி வளா்த்து வந்த 5 ஆடுகள் உயிரிழந்தன; மனிதா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்முன் அந்த மா்ம விலங்கை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நல்லவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுபதி; விவசாயி. இவா், ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றாா்.
திங்கள்கிழமை காலை வந்துபாா்த்தபோது மா்மவிலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. இதே கொட்டகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் 17 ஆடுகள் மா்மவிலங்குகள் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதை நடவடிக்கை எடுத்திருந்தால் ஆடுகள் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டிருக்கும். இந்நிலையில் தற்போது 5 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
அதுபோல இப்பகுதியில் மணிவண்ணன், பழனி, கோபால், சென்னப்பன், சகுந்தலா, சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகள் மா்மவிலங்குகள் கடித்து உயிரிழந்துள்ளன. இதுவரை 40க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கால்நடைகளைத் தாக்கும் மா்ம விலங்குகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தடுப்பதோடு கால்நடைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் இப்பகுதி மக்களின் நலன் கருதி வனத்துறையும், மாவட்ட நிா்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை உரிமையாளா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.