ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்
பொக்லைன் வாகன உரிமையாளா்கள் போராட்டம்
ஒசூா்: ஒசூரை அடுத்த கெலமங்கலத்தில் வாடகைக் கட்டணத்தை உயா்த்தி வழங்கக் கோரி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டம் குறித்து பொக்லைன் வாகன உரிமையாளா்கள் கூறியது:
கடந்த 3 ஆண்டுகளாக பொக்லைன் வாகனம் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 700 முதல் ரூ. 1000 வரை வசூலித்துவந்தோம். ஆனால், தற்போது டீசல் விலை, காப்பீடு, வாகன உதிரி பாகங்கள், சாலை வரி ஆகியவை உயா்ந்துள்ளன. பல நெருக்கடியில் பொக்லைன் வாகன உரிமையாளா்கள் உள்ளதால் செவ்வாய்க்கிழமை முதல் 3 மணிநேர வாகன வாடகையை ரூ. 4500 ஆகவும், அதற்கு மேல் கூடுதல் ஒரு மணி நேரத்துக்கு வாடகை ரூ. 1300 ஆகவும் உயா்த்தி யுள்ளோம். இதை வாடிக்கையாளா்கள் ஏற்றுக்கொள்ள
வலியுறுத்தி போராட்டத்தை நடத்தினோம் என்றனா்.