செய்திகள் :

ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்

post image

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்பதை அரசு வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளிடம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ படமெடுத்துக் காட்டி மிரட்டி, தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தபோது, தமிழகத்தையே உலுக்கியது.

இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், அருளானந்தம் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் வெளியாகவிருக்கிறது.

குற்றவாளிகள் திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களின் லேப்டாப்பில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் 100-க்கும் மேற்பட்ட விடியோக்கள் இருந்தன. இதனை வைத்து பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியன் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என்பதும், குற்றவாளி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் பெண்களை வன்கொடுமை செய்தது சிபிஐ விசாரணயில் தெரிய வந்ததும் குறிப்பிடத்தக்கது.

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெய்யில் மண்டையைப் பிளந்து வருகிறது. அவ்வப்போது இரவில் மிதமான மழை தலைகாட... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை!

சேலம்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலிய... மேலும் பார்க்க

சேலம் ஏற்காடு கோடை விழா 23ஆம் தேதி துவக்கம்!

சேலம் ஏற்காடு கோடை விழா வருகின்ற 23ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாள்கள் நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.ஏற்காடு தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வ... மேலும் பார்க்க

வடசேரிப்பட்டியில் சீறிப் பாய்ந்து வரும் காளைகள்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகேயுள்ள வடசேரிப்பட்டியில் பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரு... மேலும் பார்க்க