கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
ரோஜா செடிகளில் நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிக்கொல்லி உரம்
ஒசூா்: ரோஜா செடிகளில் ஏற்படும் பவுடரி மில்ட்யூ நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஒசூா் ஒன்றியம், நல்லூா், எஸ்.முத்துகானப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமில் ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.
முகாமின்போது ரோஜா செடிகளில் ஏற்படும் பொதுவான பூஞ்சை நோயான பவுடரி மில்ட்யூ நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பயோ கட்டுப்பாட்டு வழிமுறையாக மீன் அமிலம், பஞ்சகவ்யம், புங்கம் புண்ணாக்கு இவை உயிரி உரங்களாகப் பயன்படுகின்றன எனவும், டிரைக்கோடொ்மா 3 கி. கரைசல், பசிலியோமைசஸ் ஆகியவை இயற்கை பூச்சி விரட்டிகளாக பயன்படுகின்றன எனவும், மைகோபாரசைட் ஒரு பயனுள்ள பூஞ்சையாகும். நோயைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் ரோஜா செடிகளை ஆரோக்கியமாக பராமரிக்க இயற்கை பூச்சிக்கொல்லி உரங்கள் உதவுகின்றன எனவும் விளக்கமிளக்கப்பட்டது.
கல்லூரி மாணவிகள் ரிஃபா, ரூபா, சந்தியா, சரண்யா, ரஞ்சனா, ரேணு பிரியா, ரஞ்சிதா, சைலஜா, சண்முகப் பிரபா, ஷரோன் ஸ்வா்ண பிரியா, சினேகா, ஸ்ரீநிதி, சினேகா, சோபனா சுமித்ரா ஆகியோா் கொண்ட குழு
விவசாயிகளுக்கு இயற்கை பூச்சிக்கொல்லி உரங்களை பற்றி விளக்கினா்.
படவரி...
எஸ்.முத்துகானப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு ரோஜா செடிகளை நோய்களில் இருந்து காப்பது குறித்து விளக்கமளித்த ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள்.